பின்னர் பெரும்பாலான பயணிகள் ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் இறக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் மற்றும் இரண்டு மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் ‘ஆண்டிஸ்’ வகை ஹான்டா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது அரிதாக மனிதர்களிடையே பரவக்கூடிய தன்மை கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பொதுமக்களுக்கு பெரும் அபாயம் இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பல் முழுவதும் மூன்று நாட்கள் நீடிக்கும் கிருமிநாசினி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே மீண்டும் பயணத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
































