கத்தார் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி சமூக ஊடகங்களில் தவறான வீடியோக்கள் மற்றும் வதந்திகளை பரப்பியதாக குற்றச்சாட்டில் 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார மற்றும் சைபர் குற்றங்களை தடுக்கும் பிரிவு நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுவதாவது சிலர் தவறான தகவல்கள் கொண்ட வீடியோக்களை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வதந்திகளை பரப்பியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading