சைபர் குற்றத் தடுப்பு பிரிவு, பொது மக்களை தவறாக வழிநடத்தும் அல்லது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் தகவல்கள் பகிரும் கணக்குகள் மற்றும் வலைத்தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தவிர வேறு எந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக வதந்திகள் பரப்புவது அல்லது சமூக அமைதியை குலைக்கும் பதிவுகள் வெளியிடுவது குற்றமாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

































