மருதங்கேணியில் 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு முயற்சி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பகுதியில் தனியாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 25 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மக்களின் காணிகளை அபகரிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட […]
