வவுனியா ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞர் உயிரிழப்பு
Vavuniya accident, வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25.07) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏ9 வீதியில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற வேளையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணையில் […]
