யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏ9 வீதியில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற வேளையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பின்னால் பயணித்த அவரது சகோதரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




























