Tag: Vavuniya Accident
Vavuniya accident, வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25.07) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏ9 வீதியில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற வேளையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணையில் […]
வவுனியாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையின் கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில்,வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலாளர் இமால்ட்டா சுகுமாரின் மகனான சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]
வவுனியா – ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மாட்டுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென வீதியை குறுக்கே கடந்த மாட்டுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடனும் மோதியதில் பலத்த சேதமடைந்தது. விபத்தில் கடுமையாக காயமடைந்த சாரதி மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு […]