வட்டி குறைப்புக்கு ட்ரம்ப் முன்வைத்த காரணங்கள்
ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், உலகிலேயே மிகச்சிறந்த கடன் தகுதி கொண்ட நாடு அமெரிக்கா என்று கூறியுள்ளார். புதிய முதலீடுகளால் அமெரிக்கா வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெரும்பாலான நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அந்த நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தினால், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1.5 டிரில்லியன் டாலர்களை சம்பாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ‘பற்றாக்குறை’ என்பது நஷ்டத்தைக் குறிக்கும் கவர்ச்சியான சொல் மட்டுமே எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
உலகின் ஏறத்தாழ ஒவ்வொரு நாட்டையும் அமெரிக்கா சுமந்து கொண்டிருப்பதாகக் கூறிய ட்ரம்ப், இந்த நிலை தொடர முடியாது என தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான வட்டி விகிதங்களை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்பதே அவரது Trump Fed interest rate demand ஆகும்.






























