ஈரான் தனது கடற்படை முற்றுகை நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்கப் படைகள் இந்த மாதம் முழுவதும் ஈரானிய இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகின்றன. மேலும் ஒன்பது வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பு காரணங்களால் வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டதுடன் ஒரு கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய கிழக்கு முழுவதும் 50,000-க்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் பதிலடியாக ஈரானும் பல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகளை குறிவைத்து தாக்குதல்களை தொடர்கிறது. ஜூன் மாதத்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமும் தாக்குதல்களும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
































