அமெரிக்க அரசின் இந்த அரிய தலையீடு, ஆஸ்திரேலிய அரசு வெளியிட்ட சட்ட வரைவு தொடர்பான ஆலோசனைக்கு அளிக்கப்பட்ட பதிலில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சமூக ஊடகம், விளையாட்டு மற்றும் பிற இணையத் தளங்கள் பயனர்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
அல்கோரிதம் ஊட்டம் தொடர்பான அமெரிக்காவின் கவலை
Facebook, Instagram, TikTok உள்ளிட்ட தளங்கள் பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அல்கோரிதம் ஊட்டத்தையா அல்லது தாங்கள் பின்தொடரும் கணக்குகளின் பதிவுகளை மட்டுமே கொண்ட ஊட்டத்தையா தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது ஆஸ்திரேலிய அரசின் திட்டமாகும்.
“முன்கூட்டியே கணிக்கக்கூடிய பாதிப்பு” என்பதை ஆஸ்திரேலியா எவ்வாறு வரையறுக்கும், அந்த ஆபத்துகளை யார் தீர்மானிப்பார்கள், தளங்களுக்கும் பயனர்களுக்கும் மேல்முறையீட்டு உரிமை இருக்குமா, eSafety ஆணையரின் பங்கு என்ன என்பன குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. தனியுரிமை பாதிப்புகள் குறித்தும் அது கவலை தெரிவித்துள்ளது.
ஒரே மாதிரியான கடுமையான வடிவமைப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டால், சர்ச்சைக்குரிய தலைப்புகளின் பரவலை தளங்கள் குறைக்கக்கூடும் என்றும், இதனால் சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் பிற குரல்களின் சென்றடைவு பாதிக்கப்படலாம் என்றும் அமெரிக்க அரசு கூறியுள்ளது. இதை பாதுகாக்கப்பட்ட கருத்துரிமைக்கு எதிரான தணிக்கையாக கருதக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆஸ்திரேலியாவின் தொழில்நுட்பக் கொள்கைகளை விளக்குவதற்காக நியூயோர்க்கில் உள்ள நிலையில் இந்த விவகாரம் எழுந்துள்ளது. தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ், அமெரிக்காவின் எச்சரிக்கை பொதுவானது என்று கூறியுள்ளார்.
Australia digital duty of care சட்ட வரைவு தொடர்பான அமெரிக்க அரசின் கேள்விகளுக்கு அமைச்சர் அலுவலகமும் அமெரிக்க தூதரகமும் மேலதிகக் கருத்து தெரிவிக்கவில்லை.
































