16,000 கிலோமீட்டர் தூரத்தை ஒரே பயணத்தில் கடக்க திட்டம்
தற்போது குவாண்டாஸ், சிட்னியிலிருந்து நியூயார்க்குக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்து வழியாக தினசரி விமானங்களை இயக்குகிறது. புதிய சேவையில் சுமார் 16,000 கிலோமீட்டர் தூரம் இடைநிறுத்தமின்றி கடக்கப்படும்.
இதற்காக ஏர்பஸ் நிறுவனத்தின் விமானங்கள் சிறப்பாக மாற்றியமைக்கப்பட உள்ளன. அவற்றில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் எரிபொருள் தொட்டி பொருத்தப்படும். இதன் மூலம் விமானங்கள் தரையிறங்காமல் 22 மணி நேரம் வரை பறக்க முடியும்.
ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விமானங்களுக்கு அதிக தேவை இருப்பதாக குவாண்டாஸ் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டிலிருந்து நியூயார்க்கை இணைக்கும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. Qantas Sydney New York direct flight திட்டத்துடன், 2027 அக்டோபர் முதல் சிட்னி–லண்டன் இடைநில்லா சேவையையும் தொடங்க குவாண்டாஸ் திட்டமிட்டுள்ளது.
































