இந்த TPS பாதுகாப்பு முடிவடைந்தவுடன் அமெரிக்க குடியேற்ற அமலாக்க அமைப்பான ICE சட்டபூர்வ பாதுகாப்பை இழந்த ஹெய்டி நாட்டவர்களை இலக்கு வைத்து நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமெரிக்காவின் பல மாநிலங்களில் வசிக்கும் ஹெய்டி சமூகத்தினரிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
TPS என்பது இயற்கை பேரழிவு போர் அல்லது மனிதாபிமான நெருக்கடி போன்ற காரணங்களால் தங்கள் சொந்த நாட்டிற்கு பாதுகாப்பாக திரும்ப முடியாத வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்கா வழங்கும் தற்காலிக பாதுகாப்பு திட்டமாகும். ஹெய்டி நாட்டவர்களுக்கு பல ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது.
மனித உரிமை அமைப்புகள் மற்றும் குடியேற்ற ஆதரவு குழுக்கள் ஹெய்டியில் இன்னும் கடுமையான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடி நிலவுவதால் இத்தகைய அமெரிக்காவில் நாடுகடத்தல் அச்சுறுத்தல் ஆயிரக்கணக்கான குடும்பங்களை பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளன.
































