வாஷிங்டனில் அக்டோபர் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட தகவலில், வெளியுறவுத் துறையின் துணைச் செயலாளர் மோரா நம்தார் இதனைத் தெரிவித்தார். விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்கச் சட்டங்களை மதிக்க வேண்டும்; இல்லையெனில் அமெரிக்கா செல்லும் சலுகையை இழக்க நேரிடும் என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
விசா ரத்துக்கான காரணங்கள்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அல்லது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட வெளிநாட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் கூறினார். விசா பெற்று அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறுதல், மோசடி செய்தல் அல்லது தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எந்தவித சகிப்புத்தன்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில், நாட்டையும் அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதே முன்னுரிமை என நம்தார் குறிப்பிட்டார். முந்தைய எந்த நிர்வாகத்தையும் விட வேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது. US visa revocations எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




























