பரிசோதிக்கப்பட்ட வீடுகளில் பல இடங்களில் நீர் தேங்கிய பாத்திரங்கள், பயன்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் சுத்தம் செய்யப்படாத சுற்றுப்புறங்கள் டெங்கு கொசு பெருக்கத்துக்கு சாதகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 13 வீடுகளில் டெங்கு கொசு லார்வாக்கள் நேரடியாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டம் தற்போது டெங்கு பரவல் அபாயம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஒன்றாகக் காணப்படுவதுடன் நாட்டில் பதிவாகும் மொத்த டெங்கு நோயாளிகளில் 18 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்த மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தரப்புகள் தெரிவித்துள்ளன. பியகம, களனிய மற்றும் வத்தளை பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.Sri Lanka News
வத்தளை பிரதேச செயலகப் பிரிவுக்குள் பல குடியிருப்பு வளாகங்களில் லார்வாக்கள் கண்டறியப்பட்டுள்ளதால் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். டெங்கு இனப்பெருக்க இடங்களை அகற்றத் தவறும் வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்படுவதோடு அபராதத் தொகைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை வாரந்தோறும் சுத்தம் செய்து நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




























