இந்த திடீர் கட்டண மாற்றமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய பாஸ்போர்ட் கட்டண உயர்வானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயனாளர்கள் ஆன்லைனில் மற்றும் தபால் மூலமும் விண்ணப்பிக்க முடியும்.
குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது தடவையாக பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பிரித்தானிய அரசின் கருத்தின் படி இந்த பாஸ்போர்ட் கட்டண அதிகரிப்பானது பாஸ்போர்ட் தயாரிப்பு மற்றும் கையாளுதல் செயல்முறைகளின் செலவினங்களை சரி செய்வதற்கான ஒரு வழிமுறை என தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் கட்டண உயர்வு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.
ஆன்லைன் விண்ணப்பங்கள் (UK உள்ளே)
- வயது வந்தோர் (Adults): £88.50 ➝ £94.50
- குழந்தைகள் (Children): £57.50 ➝ £61.50
தபால் மூலம் விண்ணப்பங்கள் (UK உள்ளே)
- வயது வந்தோர்: £100 ➝ £107
- குழந்தைகள்: £69 ➝ £74
விரைவு ஒருநாள் சேவை (Premium One-Day Service)
- வயது வந்தோர்: £207.50 ➝ £222
- குழந்தைகள்: £176.50 ➝ £189
ஆன்லைன் விண்ணப்பங்கள் (வெளிநாட்டில்)
- வயது வந்தோர்: £101 ➝ £108
- குழந்தைகள்: £65.50 ➝ £70
தபால் மூலம் விண்ணப்பங்கள் (வெளிநாட்டில்)
- வயது வந்தோர்: £112.50 ➝ £120.50
- குழந்தைகள்: £77 ➝ £82.50































