குடியேற்றத்துக்கான தகுதிக் காலங்களில் மாற்றம்
முன்மொழிவுகளின்படி சில பிரிவினருக்கு நிரந்தர குடியேற்றத்துக்கான தகுதிக் காலம் மூன்று ஆண்டுகளாகவும், சிலருக்கு ஐந்து ஆண்டுகளாகவும் இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கமான காலவரம்பு பத்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்படும். பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வ வழிகளில் வரும் அகதிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வழங்கப்படலாம். அதற்கு மாறான வழிகளில் வருவோருக்கு 20 ஆண்டுகளும், சட்டவிரோதமாக சிறிய படகுகள் மூலம் வருவோருக்கு கூடுதலாக பத்து ஆண்டுகள் சேர்த்து மொத்தம் 30 ஆண்டுகளும் தேவைப்படலாம்.
முன்னைய குடியேற்றச் சட்டத்தை மீறியவர்கள், விசா காலத்தை மீறியவர்கள் அல்லது விண்ணப்பத்தில் மோசடி செய்தவர்கள் தானாகவே குறைக்க முடியாத 20 ஆண்டு காலவரம்புக்கு உட்படுவார்கள். மூன்று, ஐந்து அல்லது பத்து ஆண்டு வழிகளில் தகுதி பெற முடியாத வகையில் பொதுநிதி உதவியைத் தொடர்ந்து பெறுபவர்களுக்கும் 20 ஆண்டுகளுக்குப் பிறகே குடியேற்றம் கிடைக்கலாம்.
மே 2025 வெள்ளை அறிக்கை வெளியாவதற்கு முன் Skilled Worker வழியில் சேர்ந்த பராமரிப்பு பணியாளர்களுக்கு இடைக்கால விதிகள் வழங்கப்படலாம். வேலைவாய்ப்பு வழங்குநரின் உரிமம் நீக்கப்பட்டால், 2027 பிப்ரவரி 1 முதல் புதிய பாதுகாப்பான வேலைவாய்ப்பு வாய்ப்பைப் பெற 120 நாட்களும், விசா மற்றும் வேலைநிலையைச் சரிசெய்ய மேலும் 60 நாட்களும் வழங்கப்படும். இல்லையெனில் விசா ரத்து செய்யப்பட்டு UK-யை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம்.
UK earned settlement proposals கீழ் வருமானம், ஆங்கில மொழித் திறன், அரசு கடன் மற்றும் பிற கட்டாய நிபந்தனைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மூன்று ஆண்டு வழிக்கு ஆண்டுக்கு 125,141 பவுண்டுகள், ஐந்து ஆண்டு வழிக்கு 50,271 பவுண்டுகள், பத்து ஆண்டு வழிக்கு 12,571 பவுண்டுகள் வருமான அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்று, ஐந்து மற்றும் பத்து ஆண்டு வழிகளுக்கான விண்ணப்பதாரர்கள் முந்தைய ஐந்து ஆண்டுகளில் பொதுநிதி உதவி பெற்றிருக்கக் கூடாது என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிமாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026 டிசம்பரில் வெளியாகலாம்; மாற்றங்கள் 2027ஆம் ஆண்டில் அமலுக்கு வரலாம். இந்நிலையில், UK earned settlement proposals நடைமுறைக்கு வரும் விதம் குறித்த கூடுதல் தெளிவு மாற்றங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கிடைக்கும்.

































