வீட்டு வன்முறை, பாலியல் வன்முறை, கட்டாய திருமணங்கள், பெண் பிறப்புறுப்பு சிதைப்பு, பணியிட வன்முறை போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த எண்ணை 24/7 தொடர்புகொள்ளலாம்.
பெண்களின் நிலையைப் பொருத்து உள்ளூர் அல்லது தேசிய கூட்டாளர் அமைப்புகளுடன் இணைத்து தேவையான ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் பெண்கள் ஆண்கள் சமத்துவம் மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்திற்கான அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படுகிறது.
மேலும் 3919 பல மொழிகளில் சேவையளிக்கிறது தேவையானபோது மொழிபெயர்ப்பாளரும் வழங்கப்படுகிறார். காது கேளாதவர்களும் இந்த சேவையை அணுக முடியும். இதனுடன் பிப்ரவரி 2 முதல் தேசிய பெண்கள் ஒற்றுமை கூட்டமைப்பின் இணையதளத்தில் 3919 அரட்டை சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் இந்த சேவையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை கேட்டு ஆதரிக்க பயிற்சி பெற்ற நிபுணர்களே பதிலளிக்கிறார்கள் இதில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

































