காயமடைந்த அனைவரும் உடனடியாக கடுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்றதற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கடுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இந்த விபத்து மாணவர் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
































