இந்த போட்டியில் பல ஆண்டுகளைச் சேர்ந்த பழைய மாணவர்கள் அணிகளாக கலந்து கொண்டு தங்கள் நட்பு, ஒற்றுமை மற்றும் பாடசாலையின் மீதான பாசத்தை வெளிப்படுத்தவுள்ளனர். மேலும் பவள விழா கொண்டாட்டங்களுக்கான முன்னோட்ட நிகழ்வாக நடைபெறும்.
இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி பழைய மாணவர்களுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் வளர்ச்சிக்கும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் அனைத்து பழைய மாணவர்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு பாடசாலை நிர்வாகமும் ஏற்பாட்டுக்குழுவும் அழைப்பு விடுத்துள்ளன.





























