Nvidia நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மாத தொடக்க உச்சத்திலிருந்து 40 சதவீதம் குறைந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் இடம்பெறும் நியூயார்க் Nasdaq குறியீடும் அக்டோபர் 6ஆம் தேதியிலிருந்த உச்சத்திலிருந்து 18 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. இதனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிடைத்த சந்தை லாபங்கள் அழிந்துள்ளன.
ஆஸ்திரேலிய ஓய்வூதிய சேமிப்பில் ஏற்படும் தாக்கம்
ஆஸ்திரேலியர்களின் மொத்த ஓய்வூதிய சேமிப்பு 4.8 டிரில்லியன் ஆஸ்திரேலிய டாலராக உள்ள நிலையில், அதில் சுமார் 20 சதவீதம் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த முதலீட்டின் 20 சதவீதம் செயற்கை நுண்ணறிவு பங்குகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
இதனால் அடுத்த முறை கணக்கைப் பார்க்கும்போது ஓய்வூதியத் தொகை குறைந்திருப்பதை பலர் காணக்கூடும். BHP, Rio Tinto நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு தேவையான செம்பு கேபிள்கள் மற்றும் மின்சார உற்பத்தியால் பயனடைந்திருந்தன; சந்தை சரிவால் அவற்றின் பங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சந்தை அதிர்வுகள் காரணமாக வட்டி விகிதங்கள் மேலும் உயர்வதற்கான வாய்ப்பு குறைந்தாலும், பணவீக்கம் காரணமாக பெரிய அளவில் வட்டி குறைப்புகளுக்கு இடமில்லை. AI stock market shake-out தொடரும் நிலையில், ஆஸ்திரேலிய டாலரும் உலகப் பொருளாதார மந்தநிலையால் மேலும் அழுத்தத்தை சந்திக்கலாம்.































