தளவாய் காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றிய ராஜாகண்ணுவும், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனும் கடந்த 30ஆம் தேதி இரவு ரோந்து சென்றனர். காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் லாரி செட் முன்பு சிலப்பனுர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன், தாமரைக்கண்ணன், பரிதி ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு போலீஸார் எச்சரித்துவிட்டு ரோந்தைத் தொடர்ந்தனர். அதிகாலை 2 மணியளவில் திரும்பி வந்தபோதும், அந்த மூவரும் விநாயகர் கோயில் அருகிலுள்ள மரப்பட்டறை சந்தில் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த வீரர் உயிரிழப்பு
இதையடுத்து ஏற்பட்ட தகராறில் மூவரும் ராஜாகண்ணு மற்றும் வெங்கடேசனை தாக்கினர். வெங்கடேசனின் முகம் மற்றும் தலையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் மயங்கி விழுந்தார். ராஜாகண்ணுவின் இரு கைகளையும் முறுக்கி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் உயிரிழந்தார். போலீஸாரை தாக்கியதாக மதிவாணன், தாமரைக்கண்ணன், பரிதி ஆகிய மூவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். Ariyalur police assault தொடர்பாக போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
































