ஊடகத் துறையின் தொழில்நுட்ப சவால்கள் குறித்து கலந்துரையாடல்
Asia-Pacific Broadcasting Union General Assembly மாநாட்டில் பிராந்திய ஊடகத் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், விளையாட்டு ஒலிபரப்பு மற்றும் ஊடக உள்ளடக்கம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. செயற்கை நுண்ணறிவை ஊடகத் துறையில் பயன்படுத்துவது மற்றும் இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட தற்போதைய சவால்களும் இதில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
பொதுச்சபையுடன் இணைந்து கடந்த 30 மற்றும் 31ஆம் தேதிகளில் பல தொழில்நுட்ப மற்றும் நிபுணர் குழுக் கூட்டங்களும் நடைபெற்றன. தொடக்க நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு தூதுவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் மற்றும் ஊடகத் துறை பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.





























