அதிகாரிகள் தெரிவித்ததாவது பறவைக் காய்ச்சல் பரவலை தடுக்க உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் (biosecurity measures) மேலும் வலுப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கோழி பண்ணைகள், முட்டை உற்பத்தி நிலையங்கள் மற்றும் விலங்கு சந்தைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பண்ணை ஊழியர்கள் மற்றும் விலங்கு பராமரிப்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகத்திற்கிடமான பறவை மரணங்கள், நோய் அறிகுறிகள் கொண்ட பறவைகள் அல்லது திடீர் இறப்பு சம்பவங்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பரவலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் என சுகாதார மற்றும் விலங்கு பாதுகாப்பு துறைகள் தெரிவித்துள்ளன.
இந்த H5N1 பறவைக் காய்ச்சல் உலகளவில் பல நாடுகளில் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் கூறப்படுவதாவது தற்போதைய நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயிர் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது மிக முக்கியம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





























