Tyrol மாநிலத்தின் Wipptal பகுதியில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் கனரக வாகன போக்குவரத்து சத்தம் மற்றும் காற்று மாசு பிரச்சினைகளை எதிர்த்து பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதன் காரணமாக 2026 மே 30 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை Brenner Corridor வழியாக செல்லும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.
இந்த மூடல் காரணமாக ஜெர்மனி ஆஸ்திரியா மற்றும் இத்தாலி இடையிலான சரக்கு போக்குவரத்துக்கும் விடுமுறை பயணிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக Pfingsten விடுமுறை காலத்தை முன்னிட்டு தெற்கு ஐரோப்பாவுக்கு பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாற்று பாதைகளை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகலாம். சில வழித்தடங்களில் 3 முதல் 5 மணி நேரம் வரை கூடுதல் தாமதம் ஏற்படக்கூடும் என போக்குவரத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.































