பிரிட்டனின் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசில் உள்ள பள்ளிகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து இதேபோன்ற மின்னஞ்சல் மிரட்டல்கள் வந்தன. ஆனால், அங்குள்ள அதிகாரிகள் அவை போலியானவை என விரைவாகத் தீர்மானித்ததால், வகுப்புகள் பாதிக்கப்படவில்லை.
மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, இந்த மிரட்டல்களால் எந்த ஆபத்தும் இல்லை என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார். பள்ளி நிர்வாகங்களும், பணியாளர்களின் கண்காணிப்பில் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தன.
இத்தாலியில் வந்த மின்னஞ்சல்கள் “மிகைல் ஆண்ட்ரோபோவ், விலாயத் ஆஃப் மிசோஜினிஸ்தானின் தலைவர்” என்ற பெயரில் கையொப்பமிடப்பட்டிருந்தன. அயர்லாந்து மற்றும் பல்கேரியாவில் செய்தி நிறுவனங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட குண்டு மிரட்டல்களுக்கும் இதே அமைப்பு பொறுப்பேற்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ரஷ்யா அல்லது ஈரான் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்புகள் இருக்கலாம் என ஐரோப்பிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இத்தாலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ, எதிரி நாடுகள், வெளிநாட்டு அமைப்புகள் அல்லது கவனம் ஈர்க்க விரும்பும் நபர்கள் மூலம் அச்சத்தைப் பரப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக இவை இருக்கலாம் என்றார். பள்ளி முதல்வர்கள் சங்கத் தலைவர் அன்டோனெல்லோ ஜியானெல்லியும், போலி மிரட்டல்கள் குடும்பங்களுக்கு கடும் மனஅழுத்தத்தையும் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரிய இடையூறையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார். Italy school bomb hoax தொடர்பான விசாரணைகள் குறித்து மேலதிக தகவல் வெளியிடப்படவில்லை.
































