சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்ஸ் ரத்த தானம் – புதிய அறிவிப்பு

15 ஜூன் 2026 முதல் பிரான்சில் ரத்த தானம் செய்யும் நபர்களுக்கான தகுதி விதிகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. 2026 மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அரசாணையின் படி ரத்த தானம் பாதுகாப்பாக நடைபெறுவதற்காக சில மருத்துவ மற்றும் உடல்நிலை தொடர்பான விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் ரத்த தானம் பொதுவாக 18 முதல் 70 வயது வரை உள்ள ஆரோக்கியமானவர்கள் மற்றும் குறைந்தது 50 கிலோ எடை உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஆண்கள் வருடத்திற்கு அதிகபட்சம் 6 முறை மற்றும் பெண்கள் 4 முறை வரை ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

புதிய விதிகளின்படி 38°C க்கும் அதிகமான காய்ச்சல் அல்லது தொற்று ஏற்பட்டிருந்தால் அறிகுறிகள் முழுமையாக நீங்கிய பின்னர் குறைந்தது 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும். பாலியல் தொடர்பான சில சூழ்நிலைகளில் கூட தாமத காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொடர்பான தொற்றுநோய் (IST) இருந்தால் 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும் சிபிலிஸ் இருந்தால் 1 வருடம் காத்திருக்க வேண்டும்.

கடந்த 4 மாதங்களில் ஒருவருக்கும் மேற்பட்ட துணை இருந்தால் 4 மாத இடைவெளி அவசியம். பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்டிருந்தால் 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும். மேலும் HIV தடுப்பு மருந்துகள் (PrEP அல்லது PEP) எடுத்திருந்தால் கடைசி மாத்திரை எடுத்ததிலிருந்து 4 மாதங்கள் அல்லது ஊசி வடிவில் எடுத்திருந்தால் 24 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

சில நாடுகளுக்கு பயணம் செய்த பிறகும் ரத்த தானம் தற்காலிகமாக தடை செய்யப்படலாம். உதாரணமாக West Nile வைரஸ் பாதிப்பு இருந்தால் 120 நாட்கள் காத்திருக்க வேண்டும். மலேரியா தொடர்பான சூழ்நிலைகளில் 4 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை தாமதம் இருக்கலாம். Chagas நோய் இருந்தால் ரத்த தானம் நிரந்தரமாக அனுமதிக்கப்படாது.

அதேபோல், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் சிறிய சிகிச்சைக்கு குறைந்தது 1 வாரம் மற்றும் பெரிய சிகிச்சைக்கு 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். பல் சிகிச்சை செய்திருந்தால் 1 நாள் முதல் 1 வாரம் வரை காத்திருக்க வேண்டும். டாட்டூ, பியர்சிங் அல்லது அக்குபங்க்சர் செய்திருந்தால் பொதுவாக 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும். சில மருந்துகள் எடுத்திருந்தால் கூட சிறிய கால தாமதம் அவசியம்.

சில சூழ்நிலைகளில் ரத்த தானம் முற்றிலும் அனுமதிக்கப்படாது. உதாரணமாக prion நோய் வரலாறு இருந்தால் அல்லது 1980–1996 காலத்தில் UK-ல் 1 வருடத்திற்கு மேல் வசித்திருந்தால் ரத்த தானம் செய்ய முடியாது. இந்த புதிய விதிகள் ரத்தம் பெறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்