கெய்ரோவின் மக்கள் நெருக்கமான பகுதியில், அதிக போக்குவரத்து கொண்ட நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, அருகிலிருந்த வாகனங்களுக்கும் பரவியது. குடியிருப்புகளுக்கு சில மீட்டர் தொலைவில் பெரிய தீப்பிழம்பும் கரும்புகையும் எழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து விசாரணை தொடக்கம்
தீயணைப்பு வீரர்கள் நீண்ட முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்கள் கிசா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் ஆம்புலன்ஸ்களிலும், சிலர் தனியார் வாகனங்களிலும் மருத்துவமனைக்கு சென்றனர்.
இந்த நெடுஞ்சாலை விபத்துக்கு காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக எகிப்தின் பொது வழக்கறிஞர் அறிவித்துள்ளார். Cairo fuel truck fire சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
































