கள்ளநோட்டுகள் பறிமுதல்
தகவலின் பேரில் அங்கு சென்ற பெரியகடை வீதி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கரும்புக்கடை பாத்திமா நகரைச் சேர்ந்த அக்தர் பர்வேஷ் (21), ஆபில் (20), செல்வபுரம் அமுல் நகரைச் சேர்ந்த யாயூ லியாஸ் (19), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷாகித் (19), முகமது இர்பான் (18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 500 ரூபாய் மதிப்பிலான 372 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Coimbatore counterfeit currency case விசாரணையில், கள்ளநோட்டுகளை அச்சடிக்க முகேஷ் குமார் உதவியதாக தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். முகேஷ் குமார் மீது ஏற்கனவே மோசடி மற்றும் கள்ளநோட்டு புழக்கம் தொடர்பான புகார்கள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

































