கணபதி பகுதியைச் சேர்ந்த சந்தோஷுக்கு சொந்தமான இந்த பெட்ரோல் பங்கில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய பெட்ரோல் டேங்க் அமைக்கப்பட்டது. அதில் பெட்ரோல் நிரப்பி வாகனங்களுக்கு விநியோகிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
பெட்ரோல் டேங்க் மூடி சிதறியதில் ஓட்டுநர் பலி
சம்பவத்தின்போது சி.என்.ஜி. நிரப்புவதற்காக ஆட்டோக்களும் கார்களும் வரிசையில் காத்திருந்தன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஊழியர்கள் புதிய டேங்கில் பெட்ரோல் பம்ப் மூடியை பொருத்தியதாக கூறப்படுகிறது. பம்ப் குழாயில் இருந்த பெட்ரோல் காலியாக இருந்த டேங்குக்குள் சென்றதால் ஏற்பட்ட அதிக அழுத்தத்தில் மூடி சிதறியது.
அப்போது, தனது ஆட்டோவில் காத்திருந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த கன்னிமுத்துவின் தலையில் மூடி பலமாக மோதியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.
உரிமையாளர் சந்தோஷ், மேலாளர் தனபால் மற்றும் ஊழியர்கள் அஜித் குமார், ராஜசேகர், அகஸ்டின், அஜித் ஆகிய 6 பேர் மீது கவுண்டம்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். Coimbatore petrol tank blast தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையாளர் சந்தோஷ் தலைமறைவாக இருப்பதால் அவரைத் தேடி வருகின்றனர்.


































