அமெரிக்க வர்த்தகத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் திட்டத்தைத் தெரிவித்தது. எனினும், தடை எப்போது அமலுக்கு வரும் என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை மற்றும் Megaspeed நிறுவனத்திடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு AI சில்லுகள் சென்றதாக சந்தேகம்
தரவு மையங்களை உருவாக்கும் பணியில் முக்கியமாக ஈடுபடும் Megaspeed நிறுவனம், அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி Nvidia நிறுவனத்தின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சில்லுகள் சீன நிறுவனங்களிடம் சென்றடைய உதவியதாக அமெரிக்க வர்த்தகத் துறை சந்தேகித்துள்ளது. இந்த விசாரணை, சமீபத்திய சர்ச்சைக்கு முன்பே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாகத் துறை கூறியுள்ளது.
Megaspeed US blacklist நடவடிக்கைக்கு பின்னணியாக, நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி Alice Huang சீனாவுக்காக உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளும், Nvidia தலைமை நிர்வாகி Jensen Huang உடனான அவருடைய தனிப்பட்ட உறவு குறித்த செய்திகளும் உள்ளன. சீனா, Alice Huang உளவாளி என்ற குற்றச்சாட்டை மறுத்ததுடன், இந்த விவகாரத்தை தொழில்நுட்பத் தடைக்கு காரணமாகப் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சீனாவுக்கு இத்தகைய தொழில்நுட்பங்களை வாங்குவதில் 2022 முதல் கட்டுப்பாடுகள் உள்ளன.































