குற்றச் சம்பவ இடத்தில் கிடைத்த DNA மாதிரிகள் வழக்கமான சட்ட அமலாக்க தரவுத்தளங்களில் பரிசோதிக்கப்பட்டும் பொருத்தம் கிடைக்கவில்லை. மேடிசன் கவுண்டி ஷெரிப் அலுவலக விசாரணையாளர்கள் மூன்று தசாப்தங்களாக நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தி பல்வேறு தடயங்களைத் தேடினர்.
மரபியல் தரவால் கிடைத்த முக்கிய தடயம்
கடந்த ஆண்டு, மரபியல் விசாரணை முறையைப் பயன்படுத்தும் ஹூஸ்டனைச் சேர்ந்த Othram நிறுவனத்திடம் DNA ஆதாரங்கள் அனுப்பப்பட்டன. குற்றவாளியின் நேரடி DNA கிடைக்காத நிலையில், அவரது தொலைதூர உறவினர்கள் வணிக மரபியல் தரவுத்தளங்களில் வழங்கிய தகவல்களின் மூலம் ஒரு ஆண் குடும்ப உறுப்பினர் அடையாளம் காணப்பட்டார். அந்தத் தடயம் ஆல்பர்ட் “படி” ஸீக்லர் (70) என்பவரை நோக்கி விசாரணையை நகர்த்தியது. காவல்துறையின்படி, அவர் கொலை குறித்து ஒப்புக்கொண்டார்; இந்த ஆண்டு மே மாதம் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் Cold Case DNA Technology உடன், புளோரிடாவைச் சேர்ந்த CentralSquare நிறுவனத்தின் Centerline AI தளமும் பயன்படுத்தப்பட்டது. 1993 முதல் சேகரிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட பக்க ஆவணங்களை ஆய்வு செய்து, காலவரிசை மற்றும் சாட்சியாளர் தகவல்களை ஒழுங்குபடுத்த இந்தத் தளம் உதவியது. இருப்பினும், தொழில்நுட்பம் விசாரணையாளரின் பணிக்கு மாற்றாகாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரபியல் விசாரணை முறை அடையாளம் தெரியாத மனித எச்சங்கள் மற்றும் நீண்டகால வழக்குகளில் உதவினாலும், DNA இல்லாத வழக்குகளில் அதை பயன்படுத்த முடியாது. மரபியல் தரவுகளின் தனியுரிமை, நிதிப் பற்றாக்குறை மற்றும் உறவினர்களின் ஒப்புதல் தொடர்பான கேள்விகளும் தொடர்கின்றன.






























