இதுவரை வெற்றிகரமான இணையத் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை. எனினும், அதன் தாக்கம் உடனடியாகத் தெரியாமல் சில மாதங்களுக்குப் பிறகும் வெளிப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உலக இணையதளங்களில் சுமார் 70 சதவீதம் PHP-ஐப் பயன்படுத்துவதாக Wiz நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் குறைபாடுகள் “php2shell” என அழைக்கப்படுகின்றன.
இங்கிலாந்தில் அரசு சேவைகள் முன்னெச்சரிக்கையாக முடக்கம்
இங்கிலாந்து அரசின் 32 சேவைகள் தற்காலிகமாகக் கிடைக்கவில்லை என்றும், மேலும் நான்கு சேவைகள் பகுதியளவில் செயல்படவில்லை என்றும் தொழில்நுட்ப அமைச்சர் பரோனஸ் லாய்ட் தெரிவித்தார். பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம் என அரசு கூறியது. பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியமான அரசு சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
Cloudflare நிறுவனத்தின் வலையமைப்பில் குறைபாடுகளைப் பயன்படுத்த முயன்ற சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் தொடங்கி, பின்னர் மில்லியன் கணக்காக அதிகரித்ததாக அதன் தலைமை நிர்வாகி கூறினார். Amazon-மும் இதுபோன்ற முயற்சிகளை கண்டறிந்ததாக தெரிவித்தது. பிரான்ஸின் Orange நிறுவனம் சில உலகளாவிய சேவைகளுக்கான அணுகலைத் தற்காலிகமாக நிறுத்தி பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செய்தது. PHP security vulnerabilities காரணமாக சிறு நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகளும் பாதிக்கப்பட்டன.































