கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தாலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தியாவுடன் செய்யப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் எரிபொருள் விலை உயர்வு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றி செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் மக்களுக்கு உண்மைகள் தெரிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.



























