Tag: Easter Sunday Attacks
Easter Sunday attacks charges, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சணிவிரத்ன மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு ஈஸ்டர் […]
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அவரிடம் முக்கிய தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் சி.டி. விக்ரமரத்ன காவல்துறை மா அதிபராக பதவி வகித்ததுடன் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக அந்தச் சம்பவம் தொடர்பான பல முக்கிய […]
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே தொடர்பாக நீதி மனித கௌரவம் மற்றும் கருணை அடிப்படையிலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு அவரது தாயார் கிளோடியா சலே வத்திகானில் உள்ள திருத்தந்தை லியோவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம் கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் எந்த நீதிமன்றத்தாலும் குற்றவாளியாக அறிவிக்கப்படாத நிலையிலும் பொதுமக்கள் மத்தியில் குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதாக அவர் […]
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலேவை ஒரு தேசிய வீரராக சித்தரித்து அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான தெளிவான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை என்றார். […]
கோத்தாபய ராஜபக்ச மனு தொடர்பாக இலங்கையின் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மீண்டும் கவனம் அதிகரித்துள்ளது. 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்யும் அபாயம் இருப்பதாக அவர் கூறுகிறார். இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் writ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரா, CID சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி […]
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசேட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போதி தம்ம மானவ வின்சா சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் இரத்தினபுரி போதம்ம தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சுரேஷ் சலே மற்றும் திலீப […]
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் எவருக்கும் எதிர்ப்பு இல்லை என்றாலும் விசாரணை என்ற பெயரில் அநீதி அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணைகளே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் யுத்தம் […]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய புலனாய்வு தகவல்கள் முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவிடம் இருந்ததாகவும் அவற்றை வெளிக்கொணரவே தற்போது அவரது மடிக்கணனியின் இரகசிய இலக்கத்தை புலனாய்வு பிரிவினர் கோரி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தாலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தியாவுடன் செய்யப்பட்ட பாதுகாப்பு […]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே எந்தவொரு குற்றத்திலும் தொடர்பில்லாதவராக இருந்தால் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் பெப்ரவரி மாதம் முதல் தடுப்புக்காவலில் இருந்தபோதும் எந்த எதிர்ப்பும் எழாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி […]