மேலும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காதது மற்றும் மின்னணு சாதனங்களின் கடவுச்சொற்களை வழங்க மறுத்தது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார். தமிழ் இளைஞர்கள் கடந்த காலங்களில் அனுபவித்த துன்பங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய குற்றச்சாட்டுகள் வேறுபட்டவை என்றும் அவர் கூறினார். ஈஸ்டர் தாக்குதலுடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு உள்ளதா அதன் பின்னணி என்ன என்பன முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், எந்த நபரையும் வீரராக முன்னிறுத்தி சட்ட நடைமுறைகளில் இருந்து விலக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார்.
சுரேஷ் சலேவை காப்பாற்ற முயற்சிப்பது தவறான முன்னுதாரணம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலேவை ஒரு தேசிய வீரராக சித்தரித்து அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான தெளிவான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை என்றார்.































