சுரேஷ் சலேவை காப்பாற்ற முயற்சிப்பது தவறான முன்னுதாரணம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலேவை ஒரு தேசிய வீரராக சித்தரித்து அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான தெளிவான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை என்றார். […]
