உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் பெப்ரவரி மாதம் முதல் தடுப்புக்காவலில் இருந்தபோதும் எந்த எதிர்ப்பும் எழாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னரே சில தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.
மேலும் சுரேஷ் சலே மீது மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏனையோருக்கு பின்பற்றப்பட்ட நடைமுறைகளே அவருக்கும் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை விசாரணைகள் தொடரும் என்றும் விசாரணைகளை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு விடயங்கள் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றும் புதிய சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதுவரை தற்போதைய சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.






























