இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரா, CID சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி மதவ குணவர்தன மற்றும் சட்ட மா அதிபர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.மேலும் கொழும்பு Fort நீதிமன்றம் ஜூன் 3ஆம் தேதி வழங்கிய வெளிநாட்டு பயணத் தடையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த உத்தரவு முன்னாள் ஜனாதிபதியையும் இரு இராணுவ புலனாய்வு அதிகாரிகளையும் வெளிநாடு செல்லத் தடை செய்துள்ளது.
இதன் பின்னர் தன்னை கைது செய்யும் அல்லது தனிநபர் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இதுவரை எந்த விசாரணை அமைப்பும் தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் விசாரணையை முன்னெடுக்கும் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரா பாகுபாடு காட்டக்கூடும் எனவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் விசாரணை நியாயமாக நடைபெறாது என்ற சந்தேகம் உருவாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதுபோல முந்தைய ஆணைக்குழு அறிக்கைகள், பாராளுமன்றத் தேர்வுக் குழு அறிக்கை மற்றும் Channel 4 ஆவணப்படம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் நீதிமன்றம் கோர வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இறுதியாக இறுதி தீர்ப்பு வரும் வரை கைது அல்லது தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து தன்னை பாதுகாக்க இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.































