சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே தொடர்பாக நீதி மனித கௌரவம் மற்றும் கருணை அடிப்படையிலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு அவரது தாயார் கிளோடியா சலே வத்திகானில் உள்ள திருத்தந்தை லியோவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம் கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் எந்த நீதிமன்றத்தாலும் குற்றவாளியாக அறிவிக்கப்படாத நிலையிலும் பொதுமக்கள் மத்தியில் குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு விசாரணைகளிலும் சுரேஷ் சலே சந்தேகநபராக அடையாளப்படுத்தப்படவில்லை என்றும் விசாரணைச் செயல்முறைகளில் நலன் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்புக் காவலின் போது உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகக் கூறி அவரது கண்ணியம், மனித உரிமைகள் மற்றும் உரிய சட்ட நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என திருத்தந்தையிடம் தலையீடு கோரியுள்ளார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்