கொழும்பில் இன்று (15) முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சுரேஷ் சலே மற்றும் திலீப பீரிஸ் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்களையும் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்ததாக கூறினார். சில மதத் தலைவர்களின் கருத்துகள் சமூகத்தில் வெறுப்புணர்வையும் மத பிளவுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் விசாரணைகள் சட்டத்தின் வரம்பிற்குள் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் நாட்டின் மனித உரிமை நிலைமைகளை ஆராய சர்வதேச விசாரணைக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.




























