இந்த குட்டிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவை வளர்ச்சியடைந்து வருவதால் அவற்றை வெளியில் கொண்டு வந்து பார்வையிட அனுமதிப்பது ஆபத்தானதாக மாறியுள்ளது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.தெஹிவளை பூங்கா அதிகாரிகள் கூறுகையில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் குட்டிகளை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.
மேலும் பெயர் சூட்டும் நிகழ்விற்காக பொதுமக்களிடமிருந்து பெயர் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தெஹிவளை சிங்கக்குட்டிகள் பார்வையிடும் வாய்ப்பு குறைந்த காலத்திற்கே கிடைப்பதால் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
































