விசா கட்டணம் மற்றும் செயலாக்க காலம்
விசிட் துபாய் தளத்தில் சுற்றுலா விசா வகைகள், விண்ணப்பக் கட்டணம், தேவையான ஆவணங்கள் மற்றும் செயலாக்க நேரம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 30 நாள் ஒற்றை நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் மதிப்பு கூட்டு வரி இல்லாமல் 200 திர்ஹமில் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் பொதுவாக மூன்று வேலை நாட்களுக்குள் பரிசீலிக்கப்படுகின்றன.
30 நாள் மற்றும் 60 நாள் காலத்துக்கான ஒற்றை நுழைவு, பலமுறை நுழைவு விசாக்களுடன், ஐந்து ஆண்டு பலமுறை நுழைவு விசா வகையும் பட்டியலிடப்பட்டுள்ளது. Dubai tourist visa applications தொடர்பான விண்ணப்பங்களை தொடர்ந்து துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் பரிசீலித்து விசா வழங்கும்.
இந்த முயற்சியை துபாய் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் நவம்பர் 1ஆம் தேதி அறிவித்தார். அரசு சேவைகளை ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளங்களில் வழங்கும் Shared Digital Channels Initiative-ன் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படுகிறது. புதிய சேவை குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

































