டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டினில் இருந்து பஹாமாஸ் நோக்கிப் புறப்பட்ட விமானம், புளோரிடா வான்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டது. விமானம் வேகமாக உயரத்தை இழப்பதாகவும், கடுமையான அவசரநிலை ஏற்பட்டுள்ளதாகவும் துணை விமானி குரல் பதிவில் தெரிவித்துள்ளார். விமானம் தரையில் மோதப்போகிறது என்றும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
துணை விமானி நத்தாலியா ஃபில்கீராஸ் அடையாளம்
அமெரிக்க ஊடகங்களின் தகவலின்படி, அந்தக் குரல் 20 வயதான துணை விமானி நத்தாலியா ஃபில்கீராஸுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளிக் காலத்திலேயே விமானி உரிமம் பெற்றிருந்த அவர், 1,300க்கும் அதிகமான விமானப் பயண நேரத்தைச் சேர்த்திருந்தார்.
விபத்துக்கு முன்பு விமானத்தில் பனிப்படலம் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். விமானம் கடுமையான இடியுடன் கூடிய புயல் மண்டலத்துக்கு மேலாகச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அந்தப் புயல் திடீரென உயரம் பெற்றதால் கடுமையான காற்றுக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டிகள் விபத்தில் முற்றிலும் சேதமடைந்திருக்கலாம் என்றாலும், விசாரணையாளர்கள் தொடர்ந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். Florida private jet crash-க்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

































