அதிகாரிகளின் தகவலின்படி 2025 மற்றும் 2026 காலகட்டங்களில் French Drivers சாலை விபத்து மரணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சாலை மரணங்கள் 15% உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் “கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் என்று பிரான்ஸ் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
2027 முதல் பிரான்சின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான புதிய வேகக் கேமராக்கள் நிறுவப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு (Mairies) நேரடியாக கேமரா அமைக்கும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இதனால் சிறிய நகரங்களிலும் கூட வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கலாம்.
மேலும் தற்போது பயன்படுத்தப்படும் பாரம்பரிய speed camera களுடன் சேர்த்து AI தொழில்நுட்ப கேமராக்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவை ஓட்டுநர் கைபேசி பயன்படுத்துகிறாரா seatbelt அணிந்துள்ளாரா பாதுகாப்பான இடைவெளி விட்டு செல்கிறாரா போன்றவற்றையும் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.































