கப்பலில் இருந்த ஒரு பிரிட்டிஷ் நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சில பணியாளர்களுக்கும் கடுமையான சுவாசக் குறைபாடு அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இந்த கப்பல் தற்போது கேப் வெர்டே அருகே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் அதிகாரிகள் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பயணிகளை கரைக்கு இறங்க அனுமதிக்கவில்லை.
மருத்துவ குழுக்கள் கப்பலில் ஏறி நோயாளிகளை பரிசோதித்து சிலரை அவசரமாக வெளியேற்றத் திட்டமிட்டுள்ளன. பொதுவாக எலி போன்ற உயிரினங்களின் மூலம் பரவும் இந்த ஹண்டா வைரஸ் அரிதாக மனிதர்களுக்கிடையிலும் பரவக்கூடும் என WHO எச்சரித்துள்ளது. இந்த சம்பவம் உலகளவில் கவலை ஏற்படுத்தியுள்ளதுடன் வைரஸ் பரவலின் மூலத்தை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.




























