ஆதார வைத்தியசாலையாக இயங்கி வந்த ஹொரணை மருத்துவமனை கடந்த 2022 ஜூன் 3ஆம் திகதி மாவட்ட பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது 544 நோயாளர் கட்டில்களையும் 739 அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ள இந்த மருத்துவமனை,ஹொரணை மட்டுமன்றி களுத்துறை கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளைச் சேர்ந்த சுமார் பத்து இலட்சம் மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.
அதிகரித்து வரும் நோயாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மூன்றாம் நிலை சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையின் அனைத்து பௌதீக மற்றும் நிதிச் சொத்துக்களுடன் அதை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கொண்டு வர அமைச்சரவை இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.




























