மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி, விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார். கோவை ரெட் பில்ட்ஸ் பகுதியில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானியில் நடைபெற்ற மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்க அவர் கடந்த ஒரு வாரமாக அங்கு தங்கியிருந்தார்.
விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் தொடர்பான தகவல்கள் குறித்து விசாரணை
சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானிய பெண் உளவாளியிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்களை அவர் பகிர்ந்ததாக ஆந்திரப் பிரதேச காவல் துறையின் கவுண்டர் இன்டெலிஜென்ஸ் சிறப்பு பிரிவு விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு நடவடிக்கைகள் மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான வழக்குகளை இந்தப் பிரிவு விசாரிக்கிறது.
Indian Navy sailor arrested சம்பவம் தொடர்பான தகவலை ஆந்திர மாநில சி.ஐ. சிறப்பு பிரிவு போலீசார் இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கைது செய்ய அனுமதி பெற்ற பின்னர், ஆந்திராவில் இருந்து நேற்று காலை கோவை வந்த சிறப்பு குழு, ஐ.என்.எஸ். அக்ரானியில் பிரதீப் முகர்ஜியை கைது செய்தது.
பின்னர் அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
































