பதும் நிஸ்ஸங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், அவரது உடல்நிலை மருத்துவ ரீதியாகத் தகுதியானது என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர் அணியுடன் பயணம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் இலங்கை அணியின் டி20 சர்வதேசத் தொடர் முடிந்த பின்னர், இந்த ஒருநாள் முத்தரப்பு தொடர் நடைபெறும்.
இலங்கை ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்
Sri Lanka ODI team-ல் பதும் நிஸ்ஸங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களாக துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷண மற்றும் சச்சிந்து கொலம்பகே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க மற்றும் ஈஷான் மலிங்கா ஆகியோர் உள்ளனர்.




























