ஆகஸ்டில் தேசிய புலனாய்வுத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட கிளேட்டன், வெள்ளை மாளிகையின் பணிக்குழுவுக்குத் தலைமை வகிப்பார். இந்தக் குழு 120 நாட்களுக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பில் கவனம்
அமெரிக்கா மேம்பட்ட செயற்கை நுண்ணறிவில் முன்னணி நிலையைத் தக்கவைத்துக்கொள்வதுடன், நாட்டின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே குழுவின் நோக்கமாகும். இதற்காக “சூப்பர் இன்டெலிஜென்ஸ் படை” என்ற பணிக்குழுவை அமைக்க அதிபர் கேட்டதாக கிளேட்டன் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய சமூக அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் திட்டங்களையும் குழு முன்வைக்கும். அதேநேரத்தில், அதிகப்படியான கட்டுப்பாடுகள் புதுமை மற்றும் போட்டியை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதுடன், அபாயங்களை நிர்வகிப்பதில் பெரும்பகுதி பொறுப்பை அந்தத் துறையிடமே விடும் திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது. Trump AI task force பணிகளில், கடுமையான விதிமுறைகள் அமெரிக்காவின் சீனாவுடனான போட்டித்திறனை பாதிக்கக்கூடும் என்ற டிரம்பின் நிலைப்பாடும் பிரதிபலிக்கிறது.
பணிக்குழுவில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.





























