குவைத் மற்றும் அமீரகத் தளங்கள் குறிவைப்பு
குவைத்தில் உள்ள அகமது அல் ஜாபர் விமானத் தளத்தில் செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகள், உபகரணக் கிடங்குகள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்படும் hangar பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக ஈரான் ராணுவம் கூறியது. தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் விமானத் தள hangarகளில் சேதம் ஏற்பட்டதாகவும் அது தெரிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமானத் தளத்தில் அமெரிக்கப் படையினரின் நிலைகள் மற்றும் ரேடார் அமைப்புகள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது. Iran attacks US bases என்ற இந்தக் கூற்று குறித்து சுயாதீன உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் வான் பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை எடுத்ததாக குவைத் தெரிவித்திருந்தது. நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக மீறும் செயல் எனக் கூறி, குவைத் வெளியுறவு அமைச்சகம் சமீபத்திய தாக்குதல்களைக் கண்டித்தது.


































